Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவல்…. மீட்கப்பட்ட சிவலிங்க சிலை…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரக்கக பிரிவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப்படுவதாக ரகசியமாக முதன்மை கமிஷ்னர் உதய்பாஸ்கருக்கு தகவல் வந்தது. இதையடுத்து முதன்மை கமிசனர் பாஸ்கர் தலைமையில் இலாகா அதிகாரிகள் விரைந்து வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய சோதனையில் கும்பகோணத்தில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் பார்சலில் நாகபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சிலையை அனுப்புவதற்கான சான்றுகள் எதுவும் வாங்கவில்லை என்பதும் உறுதியானது.

அந்த சிலை 4 கிலோ 560 கிராம் எடையுடன் பித்தளையால் செய்யப்பட்டது ஆகும். பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி திருநாவலூர் அருகே உள்ள கெடிலம் கிராமத்தில் இருந்து சிலையை வாங்கியது தெரியவந்தது. 18 நூற்றாண்டு காலத்திற்கு முன்னதாக உள்ள சிலையாக இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் ஆராய்ச்சியில் தெரிவித்தனர். இதனை அமெரிக்காவிற்கு அனுப்பிவதற்கான காரணம் என்ன? அங்கு அனுப்பிய கும்பலை சேர்ந்தவர்கள் யார் எனவும் இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |