Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு வந்த ரகசிய தகவல்… வாகன சோதனையில் சிக்கியவை… 14 பேர் மீது வழக்குப்பதிவு..!!

சிவகங்கை அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தவர்களிடம் ரூ.15 ஆயிரம் பறிமுதல்  செய்யப்பட்டதோடு 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி-திருப்பூர் சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தலை நிலை கண்காணிப்புக்குழுவினர், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுப்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணனுக்கு கிடைத்த தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. மேலும் சந்தேகப்படும் விதமாக சிலர் நின்று கொண்டிருந்தனர். அதனை பார்த்த அதிகாரிகள் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் கண்காணிப்பு குழுவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் கையில் வைத்திருந்த பையை வாங்கி அதிகாரிகள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது அதில் ரூ.15 ஆயிரம் ரொக்க பணமாக இருந்தது தெரியவந்தது. மேலும் ஒரு நோட்டுப் புத்தகமும் இருந்தது. அந்த நோட்டு புத்தகத்தில் 50 பெயர்கள் உடைய பெயர் பட்டியல் இருந்தது. அந்தப் பணம் மற்றும் நோட்டு புத்தகம் குறித்து அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அதற்கு சரியான பதில் எதுவும் அவர்கள் அளிக்கவில்லை. இதையடுத்து காளையார் கோவிலை சேர்ந்த சண்முகராஜா, பாலசுப்பிரமணியன், அருள் ஸ்டீபன், செல்வராஜ் உள்ளிட்ட 14 பேர் மீது மதகுபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர். மேலும் ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்தார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |