Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிகாரியின் கண்காணிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள தா.பழூர் கிராம நிர்வாக அலுவலரான தினேஷ் என்பவர் தனது உதவியாளருடன் தாதம்பேட்டை ஆற்றங்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாதம்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் லோகநாதன் என்பவர் அனுமதியின்றி தனது இருசக்கர வாகனத்தில் நான்கு மூட்டை மணலை ஏற்றி சென்றுள்ளார்.

இதுகுறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் தா.பழூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் லோகநாதனிடமிருந்த இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |