Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகாரியின் கார் மீது கல்வீச்சு…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

வருவாய் ஆய்வாளரின் கார் மீது கற்களை வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வீரபத்ரசாமி கோவில் தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி விட்டு இரவு நேரத்தில் தூங்க சென்றுள்ளார்.

இதனை அடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்த போது கார் கண்ணாடியை மர்ம நபர்கள் கற்களை வீசி சேதப்படுத்தியதை கண்டு பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாலமுருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |