Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அதிகாரி என்னை மிரட்டுகிறார்” தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கண்டக்டர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

வாலிபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கம்புதூர் ஒரசவிளை பகுதியில் ஜெகன்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜெகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தரையில் அவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீசார் ஜெகனை அழைத்து விசாரித்தனர். அப்போது ஜெகன் கூறியதாவது, எனக்கு நாகர்கோவில் காற்றாடிவிளை வழிதடத்தில் பணி வழங்கப்பட்ட நிலையில், திடீரென அந்த வழித்தடத்தில் வேலை பார்க்கக் கூடாது என கூறினர்.

இதுதொடர்பாக கேட்டபோது அதிகாரி ஒருவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு என்னை மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெகன் கூறியுள்ளார். இதனை அடுத்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெகன் போலீசாரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |