ஆசிரியரிடமிருந்து தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மேரி பள்ளிக்கு செல்வதற்காக புதிய ராணுவ சாலையிலிருந்து பஜார் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இப்பகுதியில் வழிப்பறி அதிகமாக நடப்பதால் நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி பையில் வைத்துக் கொள்ளுங்கள் என அதிகார தோணியில் பேசியுள்ளனர்.
இதனால் அச்சத்தில் மேரி தான் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகளை கழற்றிக் பையில் வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்த பிறகு பையிலிருந்த தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் மர்ம நபர்கள் பையில் இருந்த தங்க நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து மேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.