தனது அதிகார வெறியால் தோற்க்கப்போவது பழனிசாமி தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில் கடன் தள்ளுபடிக்காக என்னை சந்தித்து நன்றி தெரிவித்தார் என்பதால் நியாயமான கோரிக்கைக்காக போராடிய இளங்கீரனை, அராஜகமாக கைது செய்திருக்கிறது முதல்வர் பழனிசாமியின் காவல்துறை. எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்தீர்கள்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அதிகார வெறியால் தோற்கப்போவது விவசாயிகள் அல்ல! பழனிசாமி தான்! என்ற விமர்சனம் செய்துள்ளார்.