அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரை அதிகாலை 4 மணிக்கு வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு நல்ல தூக்கத்தில் இருந்த இளம்பெண் அந்த மர்ம நபரை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அந்த மர்ம நபர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த அந்த மர்மநபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அந்த மர்ம நபர் வயது 30 லிருந்து 40-க்குள் இருக்கும் என்றும், உயரம் 5 அடி 7 அங்குலம் இருக்கலாம் என்ற தகவலையும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.