கர்ப்பிணி பெண் ஒருவர் வேகமாக கார் ஒட்டி வந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிரிட்டனில் north yorkshire பகுதியில் கார் ஒன்று அதிகாலையில் மிக வேகமாக வந்துள்ளது. இதை கண்ட காவல்துறையினர் காரை நிறுத்தி கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் அந்த காரை செலுத்தி வந்தது ஒரு கர்ப்பிணிப் பெண். அந்த நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியிலும் கூட குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவனைக்கு செல்வது தெரியவந்துள்ளது.
இதை அறிந்த காவல்துறையினருக்கு அந்த கர்ப்பிணிப்பெண் மேல் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் உடனே அவரை காரில் இருந்து இறங்கி பத்திரமாக மகப்பேறு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். இந்நிலையில் போலீசார் இந்த சம்பவம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.