Categories
தேசிய செய்திகள்

அதிகாலை பயங்கரம்…. ஜீப் மீது லாரி மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி….. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலம் துமகூரு அருகே ஜீப்பின் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம், சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வியாழன்) அதிகாலை 4 மணியளவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள் என்றும், பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.  விபத்து நடந்த இடத்தை காவல் கண்காணிப்பாளர் ராகுல் குமார் ஷாஹபுர்வாட் பார்வையிட்டார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் நடந்த விபத்து நெஞ்சை பதறவைத்தது.விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு PMNRF-ல் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

 

Categories

Tech |