Categories
தேசிய செய்திகள்

அதிக அளவில் அசைவ உணவு சாப்பிடும் ஆண்கள்…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் அசைவ உணவு உண்ணும் ஆண்கள் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வு சார்பாக 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட உணவு சார்ந்த ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. அதில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 15 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் அதிக அளவு அசைவ உணவை சாப்பிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக மீன் , சிக்கன், மட்டன் போன்ற உணவுகளில் நாள்தோறும் அல்லது வாரம் தோறும் சாப்பிடும் ஆண்கள் 83.4 சதவீதமாகவும் பெண்கள் 70.6 சதவீதமாக அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக 57.3% ஆண்கள் மற்றும் 45 சதவீதம் பெண்கள் மீன், கோழி அல்லது இறைச்சியை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுகின்றனர் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |