Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அதிக அளவில் ஆள் மாறாட்டம் செய்யப்படுகிறது” நடைபெற்ற குறை தீர்ப்பு முகாம்…. அறிக்கை வெளியிட்ட பத்திர பதிவுத்துறை தலைவர் ….!!!!

மாவட்ட பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து நேற்று குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள், மண்டல துணை பதிவுத்துறை தலைவர் சுதா மல்யா, மாவட்ட பதிவாளர் சுடரொளி, ஸ்ரீதர், சார்பதிவாளர் ராணி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  தமிழ்நாட்டில் ஆள்மாறாட்டம் மூலம் பதிவு செய்யப்பட்ட 5,516 பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் புரோக்கர்கள் மூலம் பத்திர பதிவு செய்து ஏமாற வேண்டாம். தற்போது 32 மாவட்டங்களிலும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சனிக்கிழமைகளிலும் பத்திர பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு பத்திரப்பதிவு துறையில் 16 கோடியை 25 லட்ச ரூபாய் அரசுக்கு வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் தற்போது வரை 1,300 கோடி ரூபாய் பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு வருமானமாக  வந்துள்ளது.

இந்நிலையில் நமது தமிழ்நாட்டில் உள்ள 14 ஆயிரம் ஆவண எழுத்தாளர்களுக்கும்  தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆவணம் எழுதும் உரிமை வழங்கப்படும். மேலும் பத்திரப்பதிவு துறையில் மோசடியில் ஈடுபட்ட 44 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  நமது மாவட்டத்தில் அதிகளவில் முறைகேடாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. எனவே மக்கள் பத்திர பதிவுகளைஉரிய  முறையில் செய்ய வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |