Categories
உலக செய்திகள்

அதிக ஊதியம் பெற்ற சிஇஓ-க்கள் பட்டியல்….. இப்பட்டியலில் இடம் பெற்ற…. இந்தியர்- யார் தெரியுமா?….!!!!

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்திருந்தது முதல், சர்வதேச அளவில் கவனம் பெறுகின்ற நபராக மாறியுள்ளார். ஆனால் அந்த டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தமானது எதுவும்  நடைபெறவில்லை. இந்நிலையில் டுவிட்டரின் 9.2% பங்குகளை அவர் வைத்திருக்கிறார்.

மேலும் அவர் தற்போது அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராகவும்  இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அதிகளவில் ஊதியம் பெற்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலை, சமீபத்தில் ஃபார்ச்சூன்500- என்ற இதழ்  வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அந்த பட்டியலில், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.82 லட்சம் கோடி ஊதியம்  பெற்று எலான் மஸ்க் முதலிடத்தை பெற்றுள்ளார்.மேலும்  2-வது இடத்தை ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் மற்றும்  3-வது இடத்தை என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கும் பெற்றுள்ளார். மேலும்  4-வது இடத்தை நெட்பிளிக்ஸ் என்ற நிறுவனத்தின்  நிறுவனர் ரீட் ஹாஸ்டிங்க் என்பவரும் பெற்றுள்ளார். இதையடுத்து  இப்பட்டியலில் இந்தியரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா 7-வது இடத்தில் உள்ளார். இவரின் ஊதியம் சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ஆகும்.


Categories

Tech |