Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிக ஒலி எழுப்பும் எர்ஹாரன்கள்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…. டிரைவர்களுக்கு எச்சரிக்கை….!!

அதிக ஒலி எழுப்பக்கூடிய எர்ஹாரன்களை பொருத்தப்பட்ட பேருந்துகளில் இருந்து அதனை போக்குவரத்துத்துறை அதிகார்கள் அகற்றியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செல்லும் பேருந்துகளில் அதிகளவில் எர்ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதில் வரும் அதிக ஒலியால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருவதாக போக்குவரத்து கழகத்துக்கு புகார் எழுந்துள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசிங் தலைமையில் அதிகாரிகள் ராசிபுரம் பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்துகளில் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது எர்ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்த 10 பேருந்துகளில் இருந்து அதனை அகற்றியுள்ளனர். மேலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய இத்தகைய ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என டிரைவர்களை எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |