Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிக கடன்… ஜப்தி செய்யப்பட்ட வீடு… மனமுடைந்த விவசாயி… எடுத்த விபரீத முடிவு…!!!

விவசாயி ஒருவர் தான் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க இயலாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 12 மணியளவில் வந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனைக் கண்ட போலீசார் அவரை தூக்கியுள்ளனர். அப்போது அவரின் வாயிலிருந்து நுரை தள்ளி உயிருக்கு போராடுவதை கண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த நபர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே பரிதாபமாக உயிரிழந்தார்.அதன் பிறகு அவர் விஷம் குடித்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் கையில் கொண்டுவந்த ஒரு கவரை கைப்பற்றிய காவல்துறையினர் அதில் பிரித்து பார்த்த போது ஆதார் அட்டை நகலுடன் பல புகார் மனுக்கள் இருந்தன. அதனை கொண்டு விசாரணை செய்ததில் உயிரிழந்தவர் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே இருக்கின்ற காமக்காபட்டி சார்ந்த 62 வயதுடைய அர்ஜுனன் என்ற விவசாயி என்பது தெரியவந்துள்ளது.அந்த விவசாயி திண்டுக்கலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அந்தத் தொகையை பல்வேறு தவணைகளாக 6 லட்சம் ரூபாய் செலுத்தி இருக்கிறார். மீதி தொகையை அவரால் செலுத்த முடியவில்லை. பணத்தை கொடுக்காவிட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என நிதி நிறுவனத்தினர் அவரிடம் கூறியுள்ளனர். அதனால் மனமுடைந்த அவர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |