தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டது. அதன்படி நேற்று முதல் தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில மக்கள் தங்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளில் செல்வது வழக்கம். ஆனால் அதனைப் பயன்படுத்திக்கொண்டு பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக toll-free நம்பரை அறிமுகப்படுத்தி உள்ளது. அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார் தெரிவிக்க 1800 425 6151 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.