கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
தீபாவளியின் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பேருந்து மற்றும் ரயில்களில் புறப்பட்டு செல்கின்றனர். கடைசி நேரத்தில் சிலர் ஆம்னி பேருந்துகளில் முண்டியடித்து செல்வதால் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது.
அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கத்திப்பாரா, அசோக் நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்த விதிமுறைகளை மீறிய 8 ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.