Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் வாங்குனா ஆப்பு… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை….. குஷியில் பெற்றோர்கள்….!!

தமிழகத்தில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணத்தை விட, கூடுதலாக வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 400 தனியார் பள்ளிகளுக்கு 2021-22 முதல் 2023-24 ம் கல்வி ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம் செய்யும் பணியில் ஓய்வு பெற்ற நீதியரசர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது.

பள்ளிகளின் சம்பள கணக்கு, வாடகை, பராமரிப்பு செலவு, மின்சார செலவு உள்ளிட்ட 33 வகையான ஆவணங்களை சரி பார்த்த பிறகு இந்தப் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்யும்.

பாட புத்தக கட்டணம் மற்ற சிறப்பு கட்டணங்களை வசூல் செய்யும் போது அதற்கான ரசீதுகளை பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு அளிக்க வேண்டும் என கட்டண நிர்ணயக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |