மாம்பழத்தை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத மருத்துவ குணங்கள்:
முக்கனிகளில் முதன்மையான பழம் மாம்பழம். அதன் சுவை, மிகுந்து காணப்படுவதுடன் உடலுக்கு உஷ்ணம் ஏற்படுத்துவதுடன் மலம் இலக்கியாகவும் செயல்படுகிறது.
மாம்பழத்தில் உள்ள சத்துப்பொருள்கள், புற்று நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளதால் இரத்த சோகைக்கு உகந்த மருந்து. மாம்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், ஆரோக்கியமான கண் பார்வைக்கு மிக அவசியமானது.
மாங்காய் தோலில் “ரெஸ்வெரடிரால்” என்ற பொருள் அதிகமாக உள்ளது.அது ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து கொலஸ்டிரால் வராமல் தடுக்கிறது.
மாம்பழம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வருவதால் இதய நோய், மாரடைப்பு, சளி, இருமல் போன்றவை குணமாகும்.