Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அதிக சிக்சர்களை அடித்து”…. சர்வதேச டி20 தொடரில்…. சாதனை படைத்த வீரர்…!!

நியூசிலாந்தை சேர்ந்த மார்டின் கப்தில் சர்வதேச டி20 தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 127 சிக்சர்களை அடித்து இந்திய அணியின் அதிரடி வீரர் ரோகித் சர்மா முதலிடத்தில் இருந்தார். ஆனால் தற்போது அதனை முறியடித்த கப்தில் 132 சிக்சர்களுடன் முதலிடம் பிடித்திருக்கின்றார். கடந்த சில தினங்களாக நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நியூசிலாந்து அணி பிப்ரவரி 25 அன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அபார வெற்றியை தட்டி சென்றுள்ளது.

இப்போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 6 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் அடித்து 97 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் அவர் சதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார். இருப்பினும் இவர் 8 சிக்சர்களை அடித்ததன் மூலம், சர்வதேச டி20 தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

Categories

Tech |