தெலுங்கு தொலைக்காட்சியில் நடித்து வரும் நடிகை அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து வருகின்றவர் கட்டா மைதிலி. இவர் சென்ற திங்கட்கிழமை ஹைதராபாத்தில் ப்ரீசர் எனும் ரம் பாட்டில்கள் 8 மற்றும் அதிக தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அன்று அவர் பஞ்சகுட்டா காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டதோடு தனது கணவரின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதையடுத்து மைதிலி தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். இதுபற்றி பஞ்சகுட்டா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்க தொலைபேசி சிக்னலை வைத்து அவரின் வீட்டிற்கு சென்று போலீசார் பார்த்தபொழுது சுயநினைவற்ற நிலையில் மைதிலி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். முன்னதாக சென்ற வருடம் செப்டம்பர் 27ஆம் தேதி பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 4 பேருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது முதற்கட்ட விசாரணை முடிந்து இருக்கின்றது.