மத்தியப்பிரதேசம் சத்தர்பூ பகுதியில் சஞ்சய் சோனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே அவரது மனைவி அதிகம் டிவி பார்க்ககூடாது என்று சஞ்சய் சோனியை எச்சரித்துள்ளார். ஆனால் சஞ்சய் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஹோலி தினத்தன்று கணவர் அதிகமாக டிவி பார்ப்பதாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவன்-மனைவி இடையே தொடங்கிய சண்டை கை கலப்பாக மாறியது.
இதனால் கோபமடைந்த மனைவி, சஞ்சையை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது இடது கண் சேதமடைந்தது. இவ்வாறு கணவனைக் காயப்படுத்திய பின், அந்தப் பெண் அவரின் சேமிப்பு மற்றும் நகைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். தற்போது அந்நபர் தனது மனைவி மீது புகார் அளிக்க மனுவுடன் காவல் நிலையத்தை நாடியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.