பெற்றோர் கண்டித்ததால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி செல்போனில் அதிகநேரம் விளையாடி உள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததால் சிறுமி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.