இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு வந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டு அதில் வெற்றி பெற ஆசைகள் இருக்கிறது. ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது இல்லை. அப்படி சொந்த தொழிலில் ஈடுபடக்கூடிய இளைஞர்களுக்கு சிறந்த முன்னோடியாகத் திகழ்பவர் தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் ஒருவரும், டெஸ்லா, Space X உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் . இவர் இளைஞர்கள் பலருக்கு சிறந்த முன்னோடியாக திகழ்கிறார்.
பல இளைஞர்களின் ரோல் மாடலாக கொண்டு தங்களது லட்சிய பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தன்னை போலவே இலட்சிய பாதையில் பயணிக்கும் இளைஞர்களுக்கு தான் கடைப்பிடித்த தலைசிறந்த மூன்று ரகசிய டிப்ஸ்களை அவர் கொடுத்துள்ளார். அதன்படி
1. அதிகமான சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
2. தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள பழக வேண்டும்.
3. என்றைக்குமே கற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது.
இதைத்தான் வந்த அவருடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு கொண்டு சென்றது என்பதை கூறியிருக்கிறார். உதாரணத்திற்கு அவர் வந்து தோல்வியை சந்தித்ததும் எந்த இடத்தில் நாம் தவறு செய்தோம், எந்த இடத்தில் இன்னும் முயற்சி செய்ய வேண்டும் என்ற இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்துதான் அவரை புகழின் உச்சிக்கும், உலகபணக்காரர்களில் இரண்டாவது இடத்தையும் கொண்டு வந்தது.