நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக பணம் வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எம்.பி.வைத்திலிங்கம் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு பற்றி தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மாநிலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் உணவுத்துறை அமைச்சர் ஆய்வு செய்து, ஆயிரம் முட்டைகளுக்கு மேல் எடுக்கப்படும் மையங்களில் கூடுதலாக ஒரு மையம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு நெல் கொள்முதல் செய்வதை அதிகப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு 40 லட்சம் ரூபாய் வாங்கப்பட்டு வருவதாக பல கேள்விகள் எழுந்துள்ளன. அவ்வாறு யாராவது செய்தால் கட்டாயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய மந்திரிசபையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்து பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுபோன்ற எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. மத்திய மந்திரிசபையில் அதிமுக அங்கம் வகிக்கும் என்பது பற்றி எந்த முடிவும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.