Categories
சினிமா தமிழ் சினிமா

“அதிக பரபரப்பு” தியேட்டர்களில் ஆரவாரம்…. எந்தப் படத்திற்கும் பிரமோஷனுக்காக சென்றதில்லை…. நடிகை திரிஷா ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்தப் படத்தின் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையான நிலையில், அடுத்த 10 நாட்களுக்கு 90% டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் பட குழுவினர் தற்போது பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், நாளை படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு இன்று நிருபர்களை சந்தித்து பேசினர். அப்போது நடிகை திரிஷா கூறியதாவது, எல்லோரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக பெருமைப்படுவார்கள். ஒரு தமிழ் படத்தை பற்றி வட இந்தியாவில் கூட சிறப்பாக பேசுகிறார்கள்.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு எப்போதுமே படப்பிடிப்பு இருக்காத நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு மட்டும் படப்பிடிப்பு இருக்கிறது. நான் இதுவரை நடித்த படங்களில் இதுவரை பிரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றதில்லை என்று கூறினார். மேலும் படம் குறித்து நடிகர் பார்த்திபன் பேசும்போது, நான் நீண்ட நாட்களாக காதலித்த பொன்னியின் செல்வன் படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பொதுமக்களை சென்றடைவதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தியேட்டர்களில் ஆரவாரம் செய்கிறார்கள். இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இப்படி ஒரு பரபரப்பை சந்தித்ததில்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |