மினி லாரியின் டயர் வெடித்து சாலையில் கவிந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து நெல்லை நோக்கி வாழைக்காய்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த லாரியை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலை உள்ள வீரபாண்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மினிலாரி டயர் திடீரென வெடித்ததுள்ளது. இதனையடுத்து லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்துள்ளது.
இதில் டிரைவர் ரங்கநாதன் அதிஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதனை அறிந்த வீரபாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த லாரியை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிக பாரத்தை லாரியில் ஏற்றியதால் டயர் வெடித்தது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.