பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தாதாபடி பகுதியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது, “நான் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து. அதில் தேர்ச்சி பெற பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்திக்க சொல்லி எனது நண்பர் ஒருவர் கூறினார். இதனையடுத்து நான் அவரை சந்தித்தேன்.
அப்போது அவர் எனக்கு பாலியல் தொல்லை அளித்தார். மேலும் நான் சொல்வதைக் கேட்டால் தோல்வி அடைந்த பாடத்தில் அதிக மதிப்பெண்களை வழங்கி தேர்ச்சி பெற வைப்பேன் என கூறினார்” என அந்த புகாரியில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பேராசிரியரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.