ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர் பட்டியலில் பட்லரும், அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் சாஹல் முதலிடம் பிடித்துள்ளனர். ஐபிஎல் போட்டியில் நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதில் அதிக ரன் குவிப்பில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் ஜோஸ் பட்லர் முதலிடத்தில் உள்ளார். அவர் 6 ஆட்டத்தில் இரண்டு சதம், இரண்டு அரை சதத்துடன் 375 ரன்கள் எடுத்துள்ளார்.
லோகேஷ் சாஹல் சதம், ஒரு அரை சதத்துடன் 265 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சில்யசுவேந்திர சாஹல் முதல் இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் வீரரான அவர் 17 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதைத்தொடர்ந்து குல்தீப் யாதவ் 13 விக்கெட்டும், நடராஜன் 12 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.