அண்மைக்காலமாக வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ள அதிகபட்ச 12.5 சதவீத வட்டியை விட அதிகளவு வட்டி தரு வதாகக் கூறி பொதுமக்களிட மிருந்து பணத்தை வசூலிக்கின்றன. ஆனால் கூறியபடி வட்டி வழங்குவதில்லை.
இந்நிலையில் அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனங்கள் கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்யக்கூடாது என்று பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி கும்பல் ஏமாற்றுகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.