மிக அதிக வட்டிக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்கும் நிறுவனங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
பிக்சட் டெபாசிட் திட்டம் தான் ரிஸ்க் இல்லாத முதலீடுகளுக்கு சிறந்த சாய்ஸ். ஆனால் அண்மைகாலமாக டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான ஈர்ப்பு குறைந்து வருகின்றது. எனினும் சில நிதி நிறுவனங்கள் வங்கி சாரா நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட்டுக்கு நல்ல வட்டி தருகின்றன. அதன்படி ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம், ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிறுவனங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி வழங்குகின்றன.
அதன்படி,
12 மாதங்கள் – 6.50%
24 மாதங்கள் – 6.97%
36 மாதங்கள் – 8.08%
48 மாதங்கள் – 8.51%
60 மாதங்கள் – 9.05%
இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.30% வட்டி வழங்கப்படுகிறது.