Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிக வரதட்சணை கேட்டு… கணவர் செய்த கொடுமை… 6 பேர் மீது வழக்குபதிவு…!!

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவர் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரான இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு வாழப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவர்களின் திருமணத்தின்போது சீனிவாசனின் பெற்றோர் வரதட்சணையாக 100பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 5 லட்சம் ரூபாய் ஆகியவை தரவேண்டும் என கேட்டிருந்துள்ளனர்.

இதில் 80 பவுன் நகை மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்துள்ளனர். மீதமுள்ள 20 லட்சம் ரூபாயை திருமணத்திற்கு பிறகு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே அதிக வரதட்சணை கேட்டு சீனிவாசன், அவரது தாய் லட்சுமி மற்றும் சகோதரிகள் இணைந்து ஜெகலட்சுமியை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஜெகலட்சுமிக்கு சரியாக காது கேட்காததை ஒரு காரணமாக வைத்து அதனை சுட்டிக்காட்டி விவாகரத்து வேண்டும் என்று அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதற்க்கு ஜெகலட்சுமி எதிர்ப்பு தெரிவித்ததால் சீனிவாசனின் குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டுள்ளனர். இதுகுறித்து ஜெகலட்சுமி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சீனிவாசன், அவரது தாய் லட்சுமி மற்றும் சகோதரிகள் என மொத்தம் 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |