Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிக வரதட்சணை கேட்டு… கொலை மிரட்டல் விடுத்த கணவர்… மனைவி பரபரப்பு புகார்…!!

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் காயக்காரி அம்மன் கோவில் தெருவில் வினோதினி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சுப்பையா சுரேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து திருமணத்தின்போது வினோதினி வீட்டு சார்பில் நகை, பணம், சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

இருப்பினும் திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்கு பிறகு சுப்பையா சுரேஷ் வினோதினியிடம் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் வரதட்சணையாக வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வினோதினியை கொடுமைபடுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வினோதினி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |