கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வாடிக்கையாளர்களிடம் தகாத வார்த்தையில் பேசிய டாஸ்மார்க் கடை ஊழியர் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள திருவரங்கம் பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடையின் விற்பனையாளர் சோலைராஜ் மற்றும் உதவி விற்பனையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது விற்பனையாளர்கள் இருவரும் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்திய ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் ரவிசந்திரன் தலைமை அலுவலக விதிகளை மீறி செயல்பட்ட டாஸ்மார்க் கடை ஊழியர்களான சோலைராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்கள் மீது துறை வாரியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தள்ளார்.