முதியவர் ஒருவர் தன்னுடைய கூந்தலை 16 அடி நீளம் வளர்த்து வைத்துள்ளது பார்க்கும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வியட்னாம் நகரில் வசித்து வரும் 92 வயதான நிகியான் சியன் என்ற முதியவர் மெகாங் பகுதியை சேர்ந்தவர். இவர் தனது தலைமுடியை 16 மீட்டர் நீளம் வளர்த்து வைத்துள்ளார். கடந்த சுமார் 80 ஆண்டுகளாகவே முடியை வெட்டாமல் இருந்ததால், தலைமுடி கடினமாகி 16 அடி நீளத்துக்கு வளர்ந்து காட்சியளிக்கிறது.
அவருடைய 16 அடி நீளமுள்ள கூந்தலை பராமரிக்க கஷ்டப்பட்டு சுருட்டி கட்டி வைத்துள்ளார். எதற்காக இவர் முடியை வெட்டாமல் இருந்தார் என்ற கேள்விக்கு,. முடியை வெட்டினால் இறந்துவிடுவோமோ என்று கருதி அவர் 80 வருடங்களாக தன்னுடைய முடியை வெட்டாமல் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய கூந்தலை பிடித்தவாறு ஒருவர் நிற்பதுபோல் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.