ஆயன் குளத்தில் உள்ள அதிசய கிணறால் அப்பகுதி வளம் கொழிக்கும் பகுதி என ஐ.ஐ.டி குழு ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் எனும் பகுதி அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை பெய்தபோது ஒரு கிணற்றில் வினாடிக்கு 2,000 லிட்டர், வீதம் தண்ணீர் விழுந்தது. இருந்தபோதிலும் கிணறு நிரம்பவில்லை பல வாரங்கள் ஆகியும் நிரம்பாத தண்ணீர் எங்கே போகிறது என பொது மக்கள் ஆச்சரியத்தில் இருந்தன.
இந்நிலையில் அந்த கிணறை பார்வையிட்ட கலெக்டர் விஷ்ணு சென்னைஐ .ஐ .டி தகவல் தெரிவித்துள்ளார். கட்டடப்பொறியில் துறை உதவி பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தலைமையில் டிசம்பர் 2,3 ஆயன்குளம் வட்டாரத்தில் ஆய்வு செய்தனர். அதில் அந்த கிணற்றின் வாயிலாக மற்ற கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதும் கண்டனர். அதில் அதிவேக மறுகூட்டல் தொழில்நுட்பத்தை செயல்படுத்தினால், திசையன்விளை பகுதியில்வளம் செழிக்க வைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக அந்தப் பகுதி தனித்துவமிக்க சுண்ணாம்பு படுகை நீர், நிலவியல் கொண்டதாகும். வெள்ளப்பெருக்கு காலங்களிலும்,அந்த பகுதியில் நிலத்தடி நீரைச் சேகரிக்க முடியும். இதன் மூலம் தனது திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போவதையும், உவர்நிலம் ஆவதையும் தடுக்கலாம். அதனால் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.