இந்த வருடம் முழுவதும் செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகம் அதன், சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வந்துவிட்டது எனவும், இந்திய நேரப்படி நேற்று இரவு 7.45 மணியளவில், இந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதி வரை நாள்தோறும் சூரிய மறைவிற்குப் பின் செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.