Categories
சினிமா

“அதிதி ஷங்கரால் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட மகேஷ் பாபு”…. எதற்காக தெரியுமா…???

நடிகர் மகேஷ் பாபு ஷங்கரின் மகள்காளால் இயக்குனர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு, சங்கரின் மகளான அதிதி பற்றி கூறியது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.இயக்குனர் சங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் தற்போது முத்தையா இயக்குகின்ற விருமன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த சமயத்தில் நடிகர் மகேஷ்பாபு அதிதி ஷங்கரரை பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, ஸ்டார் ஹோட்டலில் உணவு உண்ணும் பொழுது இரண்டு பெண்கள் என்னிடம் வந்து ஆட்டோகிராப் போடுமாறு கேட்டார்கள்.

நான் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதாக ஹோட்டலுக்கு வந்து உள்ளேன். ஆதலால் ஆட்டோகிராப் போட முடியாது என்று கூறினேன். பிறகுதான் என் நண்பர், அவர்கள் இருவரும் இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகள்கள் என்று கூறினார். இதை அறிந்ததும் சங்கரரிடம் மன்னிப்பு கேட்டதாக கூறியிருக்கிறார். ஹோட்டலுக்கு வந்த இரண்டு பெண்கள் சங்கர் அவர்களின் மகள்கள் போல் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தார்கள். இது எனக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

Categories

Tech |