Categories
தேசிய செய்திகள்

அதிதீவிர புயலாக மாறியது யாஸ்…. இன்று கரையை கடக்கிறது…!!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதிதீவிர புயலாக மாறியுள்ளதாகவும், இன்று ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடத்தில்கரையை கடக்கிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்து வருவதாகவும், தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

 

Categories

Tech |