Categories
தேசிய செய்திகள்

அதிதீவிர புயலாக மாறிய டவ்-தே…. ராகுல்காந்தி டுவிட்…..!!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபி கடலை நோக்கி நகர்ந்தது. அது புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ள டவ் தே புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது.

இது வடக்கு மற்றும் வட மேற்கே நகர்ந்து குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே செவ்வாய்க்கிழமை காலை கரையை கடக்க உள்ளது. இந்தப் புயலால் கேரளாவின் கடற்கரையோரம் உள்ள கிராமங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் அனைவரும் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |