Categories
அரசியல்

அதிநவீன அம்சங்களுடன்…. விற்பனைக்கு வந்த பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்….!!

தற்போது விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்-22 ஸ்மார்ட்போனின் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிகவும் பிரபல நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்-22 ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட் போனில் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே மற்றும் டிஸ்பிளேவை பாதுகாக்க கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பேனல் ஆகியவை இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 ஒ.எஸ்ஸில் இயங்கும் இந்த போன் 4nm octa-core Snapdragon 8 Gen 1 SoC பிராசஸரையும் கொண்டுள்ளது. இதனையடுத்து கேமாரவை பொறுத்தவரை பின்புறம் 10, 12,50 மெகாபிக்ஸல் கொண்ட 3 கேமாராக்கள் மற்றும் 10 மெகாபிக்ஸல் கொண்ட செல்பி கேமார வழங்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து சென்சார் போர்டில் ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியன் லைட், பேரோமீட்டர், கைரோ, ஹால், மேக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி68 தூசு மற்றும் வாட்டர் ரெசிஸ்டெண்ட் உள்ளிட்ட வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பேட்டரி 3,700mAh-ஐயும், 25W ஒயர் சார்ஜர், 15W ஒயர்லெஸ் சார்ஜிங்யும், 8 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஸ்டோரேஜ்யும் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதனுடைய விலை 72,999 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |