Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம்…. ஆப்ரேஷன் செய்யாமல் மூளைக்கட்டி அகற்றம்…. அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு….!!!

பெண்ணுக்கு ஆப்ரேஷன்  செய்யாமல்  மூளைக்கட்டி  அகற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழா இரால் பகுதியில் பச்சை பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொண்ணுத்தாய் (56) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தலைவலி, தலை சுற்றல் மற்றும் செவித்திறன் குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பயன் அளிக்காததால், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு‌ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இங்கு பொண்ணுத்தாயை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்கட்டி இருப்பதாக கூறியுள்ளனர். இந்த மூளைக்கட்டியை ஆப்ரேஷன் மூலம் அகற்றாமல் எஸ்ஆர்எஸ் உயிரி தொழில்நுட்ப கதிர்வீச்சு மூலம் அகற்றுவதற்கு மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி டாக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் புற்றுநோய் மருத்துவர்கள், மருத்துவ இயற்பியலாளர்கள், கதிரியக்க நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் கொண்ட 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த மருத்துவ குழு மயக்கம் மருந்து  கொடுக்காமல், ஆப்ரேஷன் செய்யாமல் அதிநவீன மென்பொருள் மூலம் முக்கிய உறுப்புகள் பாதிப்படையாதவாறு மூளைக்கட்டியை அகற்றினர். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். மேலும் அரசு மருத்துவமனையில் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் மூளைக்கட்டியை அகற்றியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |