Categories
உலக செய்திகள்

அதிபரின் பெண் உதவியாளரை…. முத்தமிட்ட எம். பி …. பரபரப்பில் அமெரிக்கா….!!

அமெரிக்காவில் ஹிலாரி கிளிண்டனின் பெண் உதவியாளர் தன்னை எம்.பி. ஒருவர் முத்தமிட்டதாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் எம்.பி. ஒருவர் ஹிலாரி கிளிண்டனின் பெண் உதவியாளரை முத்தமிட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது  குறித்து அவர் அளித்த பேட்டியில்,  அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் 2001-09 வரை செனட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது அவரது உதவியாளர் ஹுமா ஆபிதீன் (வயது  45) ஆவார். இவர் வாஷிங்டனில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட பின்னர் செனட் எம்.பி.யான ஒருவருடன் ஒன்றாக வெளியே வந்துள்ளார்.

இதனையடுத்து  அந்த எம்.பியின் வீட்டை அடைந்ததும் ஹூமாவை இவர்  “வீட்டிற்கு வந்து காபி குடித்துவிட்டு கிளம்புங்கள்” என்று அழைத்துள்ளார். இவரும் அழைப்பை ஏற்று அவருடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறிதும் எதிர்பாராத வகையில் ஹூமாவுக்கு எம்.பி முத்தம் கொடுத்துள்ளார். தற்போது ஹூமா இந்த நினைவை பகிர்ந்துள்ளார். ஹூமா, “நான் மிகவும் அதிர்ச்சியாகி அவரை தள்ளிவிட்டேன். அந்த கடைசி 10 வினாடிகள் என் வாழ்வில் இருந்து அழிக்கப்பட வேண்டும் என்பதே எனக்கு விருப்பம்” என்று கூறினார்.

இந்நிலையில் “அந்த எம்பியின் செயலால் நீங்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக உணர்கிறீர்களா?” என்று ஹுமாவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் அவருடன் ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்தேன். அதனை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. இந்த முழு அனுபவத்தையும் புதைத்துவிட்டேன். அந்த நேரத்தில் அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான் உணர்ந்தேனா என்றால் அவ்வாறு உணரவில்லை. அந்த சூழ்நிலையில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என உணர்ந்தேன்.

மேலும், அவர் மன்னிப்புக் கேட்டு, நான் நலமாக இருப்பதை உறுதி செய்ய நிறைய நேரம் செலவிட்டார் ” என பதிலுரைத்தார். அதே நேரத்தில் ஹுமாவை முத்தமிட்ட எம்.பி. யார், எந்த கட்சியை சேர்த்தவர் என்பது பற்றியெல்லாம் வாய் திறக்கவில்லை. இதனைக் குறித்து இவர் எழுதியுள்ள ‘ போத்/அண்ட்: ஏ லைப் இன் மெனி வேர்ல்ட்ஸ்’ என்ற நாளிதழில் பகிர்ந்துள்ளார். இந்த புத்தகம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இத்தகவலை தி கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஹுமா, ஹிலாரிக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் நம்பிக்கை உடையவர். இவரை தனது 2வது மகள் என்றும் ஹிலாரி கூறியுள்ளார்.

Categories

Tech |