வடகொரியாவில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்களின் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 23-ஆம் தேதி வடகொரியாவில் உள்ள பியாங்சோன் என்ற மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர்களில் அதிபர் கிம் ஜாங் உன் பற்றி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோசமான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் சில வார்த்தைகளை எழுதியிருந்தார்.
அதாவது “அதிபர் கிம் ஜாங் உன்னால் மக்கள் பட்டினியில் செத்து மடிகிறார்கள்” என்று சுவரில் எழுதியுள்ளார். ஆனால் அதனை எழுதியது யார் ? என்பது தெரியாத நிலையில் வட கொரிய அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்களின் கையெழுத்து மாதிரிகளை சேகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.