Categories
உலக செய்திகள்

“அதிபர் ஜுவெனல் மாய்செ கொலை வழக்கு”…. கோரிக்கையை நிராகரித்த துருக்கி அரசு….!!!!!

ஹைதிநாட்டின் அதிபர் ஜுவெனல் மாய்செ சென்ற 2021 ஜூலை மாதம் அவரது இல்லத்தில் வைத்து மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது மனைவி பலத்த காயமடைந்தார். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய பல நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அத்துடன் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிலர் வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

அந்த அடிப்படையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக ஹைதி காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்டும் சமீர் மண்டல் என்ற தொழிலதிபரை அந்நாட்டு அரசு தேடிவருகிறது. அவர் துருக்கியில் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்த சூழ்நிலையில், அவருக்கு எதிராக இண்டர்போல் வாயிலாக ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அவரை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று துருக்கி அரசிடம், ஹைதி காவல்துறை கேட்டுக் கொண்டது. இந்நிலையில் ஹைதி நாட்டின் நாடு கடத்தும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று துருக்கி நீதிமன்றத்தில் சமீர் மண்டல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, இண்டர்போல் வழங்கிய ரெட் நோட்டீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டதாக சமீர்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதை ஏற்று சமீர் மண்டலை ஹைதி நாட்டிடம் ஒப்படைக்கும் கோரிக்கையை துருக்கி நீதிமன்றம் நிராகரித்தது. அதனை தொடர்ந்து கடந்த 3ம் தேதி விடுதலை செய்யப்பட்ட சமீர் மண்டல், துருக்கியிலிருந்து விமானம் வாயிலாக அமெரிக்கா சென்றடைந்தார்..

Categories

Tech |