அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியான சமயத்தில் ட்ரம்ப் கோல்ஃப் விளையாடி கொண்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியிருந்தது. தொடர்ந்து ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்கள் ஆனது. இதனிடையே தான் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாகவும் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த போவதாகவும் அடுத்தடுத்து ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இவ்வாறு பரபரப்புடன் தேர்தலின் முடிவுகளை உலகம் முழுவதும் உற்றுநோக்கி கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று அமெரிக்க ஊடகங்கள் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபர் என அதிகார அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அவரது ஆதரவாளர்கள் விமர்சையாக கொண்டாடினர். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான சமயத்தில் டொனால்ட் ட்ரம்ப் எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் கோல்ஃப் விளையாடி கொண்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதோடு அவரது ஆதரவாளர்களும் கோல்ஃப் மைதானத்தின் முன்புதான் குவிந்து இருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.