ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2019ஆம் வருடம் நவம்பர் 6 ஆம் தேதியில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்ததற்கான அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென நாடாளுமன்ற கட்டிடத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறையில் காவலர் உட்பட ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த வன்முறை தாக்குதல் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வன்முறைக்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
My message to my fellow Americans and friends around the world following this week's attack on the Capitol. pic.twitter.com/blOy35LWJ5
— Arnold (@Schwarzenegger) January 10, 2021
இந்நிலையில் இதுகுறித்து ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியாவின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வாஸ்நேகர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை விமர்சித்துள்ளார். அதாவது அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் நியாயமான தேர்தல் முடிவுகளை தடுக்க முயற்சி செய்துள்ளார். மேலும் மக்களை பொய்களால் வழி நடத்த திட்டம் தீட்டியுள்ளார். மேலும் நாஜிகள் யூதர்களுக்கு எதிராக வெறியாட்டம் நடத்தியதை போல் கடந்த 6ஆம் தேதி ட்ரம்பின் ஆதரவாளர்களும் அவர்களுக்கு இணையாக வன்முறை வெறியை மேற்கொண்டுள்ளனர். ட்ரம்ப் முதுகெலும்பற்றவர், தோல்வியடைந்த தலைவர், அமெரிக்க வரலாற்றின் மிகவும் மோசமான அதிபர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.