அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது. அந்தத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் இது குறித்து கூறுகையில், ” ஜனாதிபதி தேர்தலில் சீனாவின் தலையீடு இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது. அது அமெரிக்காவை அரசியல் ரீதியாக பாதிக்கக்கூடிய மிக பெரிய திட்டத்தை கொண்டு இருக்கிறது.
சீனா மட்டுமல்லாமல் ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று நாடுகளும் நமது தேர்தலை சீர்குலைக்க முயற்சி செய்யும் விரோதி நாடுகள். அவர்களில் சிலர் ஜோ பிடனை விரும்புகிறார்கள். அதில் சிலர் ஜனாதிபதியை விருப்பம் கொள்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை அந்த நாடுகள் விரும்புகின்றன என்பது முக்கியமில்லை. அமெரிக்காவின் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் களில் தலையிட முயற்சி செய்யும் எந்த ஒரு நாட்டையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
அமெரிக்க தேர்தலில் தலையிட முயற்சி செய்யும் அனைவரும் மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என்று சீனர்கள், ரசிகர்கள் மற்றும் ஈரானியர்களுக்கு நாங்கள் வெளிப்படையாக கூறியுள்ளோம். எங்களின் தேர்தலில் புனிதத்தை பாதுகாப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்யப் போகிறோம். அதுவே நமது ஜனநாயகத்தின் அடித்தளம் மற்றும் எங்களை அமெரிக்காவாக மாற்றுகிறது. எங்கள் தேர்தலில் தலையிட முயற்சி செய்யும் மற்ற நாடுகளை நாங்கள் பொறுத்துக் கொள்ள போவதில்லை” என்று அவர் கூறியுள்ளார்.