இங்கிலாந்தில் மீண்டும் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.
இங்கிலாந்து நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் கன்சர்வேடிவ் கட்சியில் எழுந்த எதிர்ப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக பிரதமராக உள்ள லிஸ் டிரஸ் பதவி விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறைகளை அடுத்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும். அதில் குறைந்தது 100 எம்.பி.களின் ஆதரவு உள்ளவர்கள் தான் இந்த தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 300-க்கும் மேற்பட்ட எம்.பி.கள் உள்ள நிலையில் 3 பேர் களம் இறங்க முடியும். இதற்கான கால அவகாசம் வருகின்ற திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை உள்ளது. ஆனால் இதுவரை யாரும் தாங்கள் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
முன்னாள் பிரதமர் போலிஸ் ஜான்சனுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பெண் தலைவரான அமைச்சரவை உறுப்பினர் பென்னி மோர்டான்ட்டும் தேர்தலில் எம்.பி.க்களின் ஆதரவை கேட்டுள்ளார். இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு 3 பேர் போட்டியில் இறங்கினால் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.கள் முதலில் ஓட்டு போடுவார்கள், 3 பேரில் குறைவான ஓட்டு பெற்ற ஒருவர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார். இதற்காக கன்சர்வேடிவ் கட்சியின் 357 எம்.பி.க்கள் வருகின்ற திங்கட்கிழமை வாக்களிக்கின்றனர். அதில் வெற்றி பெற்றவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார். இதுகுறித்து இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் போரிஸ் ஜான்சன் கூறியதாவது. நான் முன்னோக்கி செல்ல வேண்டும். பின்னோக்கி செல்லக்கூடாது. முன்னாள் நிதி அமைச்சர் ரிஷிசுனக் பொருளாதார அனுபவம் வாய்ந்த தனித்துவமான வேட்பாளர் என அவர் கூறியுள்ளார்.