உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வரும் ரஷ்யபடைகள் தலைநகர் கீவ்வை ஆக்கிரமிக்க தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன்-ரஷ்ய படைகள் இடையில் தீவிர தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையில் உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். அதாவது நேட்டோ நாடான போலாந்துக்கு சென்ற ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையிலுள்ள வீரர்கள் மத்தியில் பேசினார். இந்நிலையில் ஜோ பைடன் பேசியதாவது “உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போரின் திட்டம் தோல்வி அடைந்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர் குற்றவாளி ஆவார்.
மேலும் அவர் பலரை இறக்கம் இன்றி கொல்பவர் ஆவார். நேட்டோ அமைப்பில் பிளவை ஏற்படுத்த விளாடிமிர் புதின் முயற்சி செய்கிறார். எனினும் அவரால் அது முடியவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக உறுதுணையாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பதாக பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. இச்சூழலில் இன்று பட்ஜெட் முன்மொழிவை வெளியிட்ட பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “நான் என் கருத்துகளுக்கு பின்வாங்கவில்லை. இதனிடையில் நான் உணரும் தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினேன். இதனால் நான் மன்னிப்பு கேட்கவில்லை. ரஷ்யாவின் அதிபர் புதின் அதிகாரத்தில் இருக்கக்கூடாது. கெட்டவர்கள் தொடர்ச்சியாக கெட்ட செயல்களை செய்யக்கூடாது” என்று அவர் கூறினார்.